மங்களுர் வெடிகுண்டு விவகாரம் : ஒருவர் பொலிஸில் சரண்!
In இந்தியா January 22, 2020 6:48 am GMT 0 Comments 1643 by : Krushnamoorthy Dushanthini

மங்களுர் விமான நிலையத்தில் வெடிகுண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பெங்களுரை சேர்ந்த ஆதித்யா ராவ் என்பரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
குறித்த நபர் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆதித்யா ராவ் சரணடைந்துள்ள விவகாரத்தை மங்களுர் பொலிஸாருக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மங்களுர் தனிப்படை பொலிஸார் பெங்களுர் விரைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த 2018ஆம் ஆண்டும் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.