மசூத் அசார் விவகாரம் – ஐ.நாவின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது அமெரிக்கா!
In இந்தியா May 2, 2019 3:10 am GMT 0 Comments 2376 by : Krushnamoorthy Dushanthini
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்துள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இது குறித்து ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுக்குழுவினரில் ஒருவர் தெரிவிக்கையில், மசூத் அசாரை 1267 அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்த்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இதன்மூலம் ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்தும் மசூத் அசாருக்கு எதிராக சொத்துமுடக்கம், பயனமுடக்கம், ஆயுத தடை போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாததுக்கு எதிராக நிலையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திவந்த நிலையில் ஐ.நா.சபை இது குறித்து நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.