மடுத் திருத்தலம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
In இலங்கை September 14, 2018 10:13 am GMT 0 Comments 1573 by : Ravivarman
மடுத் திருத்தலப் பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் 20 இற்கும் மேற்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மன்னார் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல திணைக்களக்களைத் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அத்துடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்குப் பதிலாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அவர்களும், மடு பரிபாலகரும் கலந்து கொண்டனர்.
மடுத் திருத்தல பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியான பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டம் இன்று மடு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.