மட்டக்களப்பிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
In இலங்கை January 30, 2021 8:39 am GMT 0 Comments 1340 by : Yuganthini
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு, முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 1200 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களுக்கு ஏற்றப்பட்டு, பின்னர் ஏனையர்வகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் அனைவரும் இதனைப்பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் இன்றைய தினம், மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கொரோனா தடுப்பூசியைப்பெற்றுக்கொண்ட தாதிய உத்தியோகத்தர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.