மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை April 23, 2019 11:14 am GMT 0 Comments 2344 by : Yuganthini

மட்டக்களப்பு, நாவலடி பிரதேச கடற்கரையில், கரை ஒதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, நாவலடி சுனாமி நினைவு தூபிக்கு அருகாமையிலுள்ள கடற்கரையிலேயே உருக்குலைந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என்பதுதொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.