மட்டக்களப்பில் சில இடங்களில் சுழல் காற்று – பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதம்
In இலங்கை November 26, 2020 5:25 am GMT 0 Comments 1780 by : Dhackshala
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று மாலை வீசிய சுழல் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பொது கட்டடங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
கிரான்குளத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை இந்த சுழல் காற்று வீசிய நிலையில், வீடுகள் மேல் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளிச்செல்லப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நிவர் புயல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த சுழல் காற்று வீசியுள்ளது.
இதன்போது கிரான்குளம் பத்திரகாளியம்மன், மீனவர் மீன் விற்பனை நிலையம், மீனவர் சங்க கட்டடம் என்பன சேதமடைந்துள்ளன.
அதேபோன்று கிரான்குளம் மத்திய பகுதியிலேயே இந்த சூழல் காற்று தாக்கியுள்ளதுடன், இதன்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கிரான்குளம் மத்தியில் வீசிய சூழல் காற்று காரணமாக இடம்பெற்றுள்ள சேத விபரங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதாக குறித்த பகுதியின் கிராம சேவகர் தயனி கிருஸ்ணாகரன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.