மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
In இலங்கை December 17, 2020 3:34 am GMT 0 Comments 1269 by : Yuganthini

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் மூன்று கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலும், இன்று (வியாழக்கிழமை) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்கீழ் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய கிராமங்களை இனங்கண்டு வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரன், ஆலோசனைக்கு அமைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வெல்லாவெளி பொதுச்சுகாதார அலுவலகத்துக்குட்பட்ட பரிசோதகர்களான கு.குபேரன், பி.ஜதுசன், பி.இராஜேஸ்வரன், எஸ்.ரவிகரன் ரிசிகோபன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்களின் வழிநடத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட டெங்கு குழுவினர், சமூக சுகாதார பயிற்சி உதவியாளர்கள், பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து பொது இடங்கள், பாடசாலை, வீடுகள் போன்றவற்றை பரிசோதனை செய்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.