மட்டக்களப்பில் தொடர் மழை: மூன்று குளங்களின் வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின் வான்கதவுகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நடராசா நாகரெட்ணம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழைபெய்து வருவதையடுத்து குளங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் ஐந்து அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஐந்து அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் எட்டு அடி உயரத்துக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.
உன்னிச்சைகுளம் 33 அடியும், நவகிரிகுளம் 31 அடியும் றுகம்குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்ளவுள்ள குளங்களாகக் காணப்படுகின்றன.
இருந்தபோதும், குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெயளியேற்ற வேண்டியதையடுத்து இந்தக் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நடராசா நாகரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த குளங்களுக்கு அருகிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.