மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கணபதி மகா ஹோமம்
In இலங்கை December 19, 2020 4:07 am GMT 0 Comments 1322 by : Yuganthini

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இலட்சாட்சனை பூர்த்தி மற்றும் கணபதி மகா ஹோமம் பக்திபூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் விநாயகர் காப்பு விரதத்தினையொட்டி கடந்த 18தினங்களாக ஆலயத்தில் இலட்சாட்சனை பஞ்சமுக விநாயகருக்கு நடாத்தப்பட்டுவந்தது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த உற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்தளவான பக்தர்களின் பங்குப்பற்றலுடன் இந்த இலட்சாட்சனை பூர்த்தி மற்றும் கணபதி மகா ஹோமம் நடைபெற்றது.
பஞ்சமுக விநாயகருக்கு இலட்சாட்சனை நடைபெற்றதை தொடர்ந்து கணபதி மகா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. 67 வகையான மூலிகைகள் கொண்டு இந்த மகா கணபதி ஹோமம் நடாத்தப்பட்டது.
இதன்போது இந்த நாட்டில் தாக்கம் செலுத்திவரும் கொரோனா என்னும் கொடிய அரக்கன் அழிந்து, நாடு சுபீட்சம் அடையவும் நாட்டில் அமைதி நிலவவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.