மட்டக்களப்பு – காத்தான்குடியை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை
In இலங்கை December 31, 2020 2:33 am GMT 0 Comments 1385 by : Dhackshala
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொவிட் – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணிக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், காத்தான்குடி பகுதியை எதிர்வரும் 05 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தொடர்பில் பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நள்ளிரவு 12.00மணி தொடக்கம் ஐந்து நாட்கள் காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியை சேர்ந்த ஐம்பது பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரியகல்லாறில் எந்தவித அதிகரிப்பும் இதுவரையில் காணப்படவில்லையெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவினை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் பகுதியாக வைத்திருப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் இதனை உடனடியாக தேசிய கொரோனா செயலணிக்கு பரிந்துறை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று நோயாளர்கள் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என்றும் எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுயமாக சிந்தித்து சுயமாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.