மட்டக்களப்பு குண்டுத்தாக்குதல் – CCTV காட்சி வெளியானது
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படுபவர் தொடர்பான சி.சீ.ரி.வி. காணொளியொன்று வெளியாகியுள்ளது.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முஹமட் காசிம் றில்வான் (வயது-27) என்ற குறித்த நபர், உமர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு சம்பவ தினத்தன்று பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார்.
இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 2007ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது குடும்பத்தாரை பொலிஸார் கைதுசெய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் ஐ.எஸ். தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர் என மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வருடம் கொழும்பு தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.