மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர் சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை January 5, 2021 11:29 am GMT 0 Comments 1448 by : Yuganthini
மட்டக்களப்பு- பெரியஉப்போடை பகுதியிலுள்ள வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர், இன்று (செவ்வாய்க்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) இரவு 12மணியளவில், மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற புன்னைச்சோலையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் மரியதாஸ் (48 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் மீன்பிடிக்கச்சென்றபோது வாவியில் முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டு, சின்ன உப்போடையில் உள்ள களப்பு ஒன்றுக்குள் வைத்திருந்த நிலையில் மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலகமாக மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.