மட்டு.மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஐந்து புதிய உறுப்பினர்கள்
In இலங்கை December 11, 2020 11:33 am GMT 0 Comments 1548 by : Yuganthini

மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பழைய உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு பதிலாக, ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் நியமனம் வழங்கும் நடைமுறைகளுக்கு அமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பான வர்த்தமான வெளியிடப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான ஆவணங்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.தயாபரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், குறித்த ஆவணங்களை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயராஜ், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் திருமதி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் நியமனம் பெற்ற ஐந்து உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் மாநகரசபையின் ஆணையாளரிடம் வழங்கப்பட்டது.
புதிய ஐந்து நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களில் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் ஆபிரகாம் ஜோர்ஜ் பிள்ளை, மண்முனைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தனும் உள்ளடங்குகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக மாநகர ஆணையாளர் தயாபரனிடம் புதிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கட்சி பேதங்களுக்கு அப்பால் மாநகர நலனில் அக்கரையுடன் செயற்படவேண்டும் என இதன்போது மாநகர ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.