மதரசா பாடசாலைகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் ஒப்படைப்பு
In ஆசிரியர் தெரிவு May 7, 2019 5:23 am GMT 0 Comments 2621 by : Risha

மதராசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மதரசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பான சட்டங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து இது குறித்து ஆராய்வதற்காக முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச.ஏ.அப்துல் ஹலீமினால் இக்குழு நியமிக்கப்பட்டது.
மதராசா பாடசாலைகளில் இஸ்லாமிய அடைப்படைவாதம் கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலேயே இது குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.