மதுபோதையில் காரைச் செலுத்தி 3 சிறுவர்களைக் கொன்றவருக்கு 13 வருட சிறை
In இங்கிலாந்து March 28, 2018 3:33 pm GMT 0 Comments 1682 by : S.K.Guna

மதுபோதையில் காரைச் செலுத்தி மூன்று சிறுவர்களின் மரணத்துக்கு காரணமான ஜய்னேஷ் சுடசாமா என்பருக்கு 13 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டன், ஹெய்ஸ் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி Shepiston Lane, வீதியில் குறித்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஹரி ரைஸ் 17,ஜோர்ஜ் வில்கின்சன் 16, ஜோஷ் மக்கின்னஸ் 16 ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
28 வயதுடைய ஜய்னேஷ் சுடசாமா என்ற இளைஞரே மதுபோதையில் 70 மைல் வேகத்தில் காரைச் செலுத்தி மூவருடைய உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளார்.
இந்த வழக்கு, ஓல்ட் பெய்லி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஜய்னேஷ் சுடசாமா மீது ஆபத்தான முறையில் காரைச் செலுத்தியமை, மதுபோதையில் இருந்தமை, மூவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இந்த தீர்ப்புக்குறித்து உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்; சிறைத் தண்டனை தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பெற்றுத்தராது என்று குறிப்பிட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.