மத்திய- மாநிலத்தில் புதிய ஆட்சி மலரும்: நாராயணசாமி
In இந்தியா April 27, 2019 11:27 am GMT 0 Comments 2419 by : Yuganthini

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலும் தமிழகத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் புதிய ஆட்சி தோற்றம் பெறுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாராயணசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும்.
இதேவேளை தமிழகத்துக்கு எதிரான செயற்பாடுகளையே மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
அந்தவகையில் அண்மையில் தமிழக அரசு, கஜா புயல் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசு 500 கோடி ரூபாய் மாத்திரமே வழங்கியது.
இவ்வாறு தமிழகத்தின் வளர்ச்சி பாதை குறித்து மோடிக்கு எந்ததொரு கவலையும் இல்லை. ஆகையால் அவரது ஆட்சி கவிழ்வது தற்போது உறுதியாகியுள்ளது.
இதனால் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்ததன் பின்னர் மத்தியில் காங்கிரஸின் ஆட்சியும் தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சியும் நடைபெறுவது உறுதி” என நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.