மத்திய ஸ்பெயின் பனிப்புயலுக்குப் பின்னர் -25 C வெப்பநிலை பதிவு!
In ஐரோப்பா January 13, 2021 3:48 am GMT 0 Comments 1283 by : Jeyachandran Vithushan

வார இறுதியில் கடுமையான பனிப் பொழிவைத் தொடர்ந்து ஸ்பெயினின் மத்திய பிராந்தியத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வானிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ள நிலையில் வயதானவர்களை வீட்டில் தங்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவும் இந்த காலநிலையால், மாட்ரிட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோலினா டி அரகோன் மற்றும் டெரூயலில் வெப்பநிலை -25 செல்சியஸாக குறைவடைந்துள்ளது.
இதுவரை கடும் குளிர் காரணமாக பார்சிலோனா, மாட்ரிட் மற்றும் மாலாகாவில் தலா இருவரும் ஜராகோசாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.