மனநல சுகாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வில்லியம் மற்றும் கேட்
In இங்கிலாந்து October 9, 2018 8:42 am GMT 0 Comments 1455 by : shiyani

உலகளவில் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் நோக்கில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்ரன் ஆகியோர் முதன்முறையாக உலகளாவிய மனநல உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
லண்டனில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல்தலைவர்கள், உளவியலாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் என பலரும் பங்குபற்றவுள்ளனர்.
மனநலம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்தும் உடல்நலத்திற்கு இணையாக மனநலத்தைக் கொண்டுவரும் கொள்கை குறித்தும் இந்நிகழ்வில் விரிவான விவாதங்களை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
Heads Together எனப்படும் பிரசாரத்தின் மூலம் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் மனநல சுகாதார முன்முயற்சிகளில் நீண்டகாலமாக முக்கிய பங்குவகிக்கின்றனர்.
இந்த மனநல உச்சிமாநாட்டில் அவர்கள் கலந்துகொள்வதன் மூலம் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வது இலகுவான செயலாக அமையுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.