மனம் மாறினார் அலிபாபா நிர்வாகத் தலைவர்!
In உலகம் September 10, 2018 8:34 am GMT 0 Comments 1525 by : Farwin Hanaa
அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை ஜேக் மா மாற்றிக்கொண்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) 54ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜேக் மா இன்று பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். எனினும், அடுத்த வருடமே தான் பதவி விலகப் போவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.
சீனாவின் பாரிய இலத்திரனியல் வர்த்தகத்தினை மேற்கொள்ளும் நிறுவனமான அலிபாபா நிறுவனம் உலகலாளவிய ரீதியில் பிரசித்திபெற்றது. இந்நிலையில், அலிபாபா நிறுவன வாடிக்கையாளர்களும் பங்குடமையாளர்களும் ஜேக் மாவின் பதவி விலகலை விரும்பவில்லை. இந்நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்ட ஜேக் மா அடுத்த வருடம் ஓய்வுபெறவுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அலிபாபா நிறுவனமானது, உலகின் மிகப் பெரிய இலத்திரனியல் வர்த்தகத்தினை மேற்கொள்ளும் நிறுவனம் மட்டுமன்றி கடந்த வருடத்தின் வருவாயில் இரண்டு மடங்கினை இவ்வருடமும் பெற்று பாரிய வேகத்தில் முன்னேறி வரும் நிறுவனமாகும்.
சமூக சேவகரும் ஓய்வுபெற்ற ஆங்கில விரிவுரையாளருமான ஜேக் மா, சீனாவிலேயே மூன்றாவது மிகப் பெரிய பணம் படைத்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.