மனைவியுடன் சென்று வாக்களித்தார் விஜயகாந்த்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில், தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 07 மணி முதல் வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலாதாவும் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ‘சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதாக சொல்கிறார்கள். அதை சரிசெய்யும் வேலைகள் நடந்து வருகிறது.
அதிமுக கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் 18 இடைத்தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெறும். வருமான வரித்துறை சோதனை பற்றி கேட்கிறீர்கள்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்ததுதான் அந்த சோதனை. அது பழிவாங்கும் நோக்கமல்ல. இந்த ரெய்டில் கோடி கணக்கான ரூபாய் பிடிபட்டிருக்கிறது.
இது ஜனநாயகத்துக்கே தலைகுனிவு. வாக்கிற்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவதை விட சும்மா இருக்கலாம். இது பெரும் தவறு. வேலூரில் தேர்தல் இரத்து ஆனதை ஏற்க முடியாது.
தவறு செய்த வேட்பாளர், அதாவது துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமே தவிர, தேர்தல் இரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எப்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எங்கள் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கண்டிப்பா வெற்றி பெறுவார். எல்லா தொகுதிக்கும் சென்று வந்தேன். அனைத்துத் தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.