மன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்
In இலங்கை December 2, 2020 9:55 am GMT 0 Comments 2030 by : Dhackshala
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக இன்று (புதன்கிழமை) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது.
மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.