மன்னாரில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
In இலங்கை December 19, 2020 9:04 am GMT 0 Comments 1472 by : Yuganthini
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மண் வாசனை அமைப்பின் ஊடாக, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று (சனிக்கிழமை) காலை, வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சகல விதமான பாதிப்புகளுக்கும் உள்ளான 71 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்கு 1974 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
மண் வாசனை அமைப்பின் ஊடாக தாய் நிலம் அறக்கட்டளை காரியாலயத்தில் வைத்து, தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.