மன்னாரில் 24 கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது
In இலங்கை May 5, 2019 10:40 am GMT 0 Comments 2379 by : Dhackshala
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின்போது சுமார் 25 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பான இராணுவ நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) தாழ்வுபாடு மற்றும் கீரி கிராமங்களில் இடம்பெற்றது.
குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது வீடுகள் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ச்சியான நடவடிக்கைகளின்போது 25 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபோசிகள் வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.