மன்னார் அடம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சுகாதாரப் பணியாளர் மரணம்!
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுகாதாரப் பணி உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றதுடன், பிரதேச வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளராகக் கடமையாற்றும் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ரி.எம்.சல்மான் (வயது-29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும், அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாகப் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, கனரக வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.