மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் திறந்துவைப்பு
மன்னார் – பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வட. மாகாண சபையில் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட இக்கட்டடத்தினை வட. மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்துவைத்தனர்.
இதன் போது வட. மாகாண விவசாய அமைச்சின் முக்கியஸ்தர்கள், வட. மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக அதிகாரிகள், கிராம மக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.