மன்னார் மாந்தை மேற்கில் ‘புரேவி புயல்’ காரணமாக அதிக அளவிலான கால்நடைகள் உயிரிழப்பு
In இலங்கை December 6, 2020 8:38 am GMT 0 Comments 1439 by : Yuganthini
புரேவி புயல் காரணமாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு குளப்பகுதியில் மேச்சலுக்கு சென்ற அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் அதிகளவான கால்நடைகள் காணாமல்போயுள்ளன
மன்னார்- பெரியமடு குளத்தை அண்டிய பகுதியில் மேச்சலுக்காக சென்ற நிலையில் காற்றுடன் கூடிய தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிக அளவான மாடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் சில மாடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, பெரிய மடுப் பகுதியில் காணாமல் போன கால்நடைகளை மீட்கும் பணிகள் கடற்படை, இரணுவம் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் நேற்று (சனிக்கிழமை)) மாலை இடம் பெற்றது.
இதன்போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஏனைய காணாமல் போன மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.