மருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது!
In அம்பாறை March 6, 2018 9:52 am GMT 0 Comments 1589 by : Ravivarman

அம்பாறை, மருதமுனைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வன்முறைகளைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மருதமுனையில் பூரண ஹர்த்தால், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் அப்பிரதேசத்தின் நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அதேவேளை பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு முன்னதாக அங்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.