மருத்துவ துறையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்க கூடாது – மத்திய அரசு வலியுறுத்து!
In இந்தியா January 20, 2021 3:08 am GMT 0 Comments 1347 by : Krushnamoorthy Dushanthini

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலர் மறுப்பது அதிருப்தி அளிக்கிறது.
தடுப்பூசியால் சிலருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது என்பதால், வதந்திகளைப் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.