மறைந்தார் பிரபல நடிகர்!
In சினிமா February 5, 2020 9:35 am GMT 0 Comments 1534 by : Amilkanth Ayyathurai

இயக்குனர் சமுத்திரகனியின் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கோபாலகிருஷ்ணன். இவர் இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், ஈரோடு அருகே குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ஓய்வெடுத்து கொண்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 54 ஆன இவர் கடைசியாக நடித்த நாடோடிகள் 2 திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இவரது மறைவுக்கு நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.