மறைந்த முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு நிகழ்வு!

மறைந்த முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு ஐ.தே.க.வின் வட்டுக்கோட்டை தொகுதி காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டதுடன், தற்கால கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன், கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிதாரியால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இவர், நாடாளுமன்றில் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.