மலையகத்திலும் பல பகுதிகளில் தீவிர சோதனை

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன்பொருட்டு நேற்றிரவு முதல் நுவரெலியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக நுவரெலியா காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளிலுள்ள விடுதிகளை அண்மித்த பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.