எமக்கு ஆதரவளித்தவர்களுக்கு நாமும் ஆதரவளிக்க வேண்டும் – சந்திரகுமார் கோரிக்கை
In இலங்கை January 23, 2019 7:50 am GMT 0 Comments 1253 by : Dhackshala
தமிழர் தாயகப்பகுதிகளில் மக்கள் போராடியபோது மலையக மக்கள் ஆதரவாக இருந்தனர். அதன்படி அவர்களின் தார்மீக போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கிளிநொச்சி மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகளவு பங்களிப்புச் செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கின்றனர். அதனை அவர்களுக்கு வழங்குவதால் எவருக்கும் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை.
தோட்டத் தொழிலாளர்கள் தோடர்ச்சியாக சுரண்டப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்களின் உரிமைகள், நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அதுவரைக்கும் நாம் அந்த மக்களோடு உறுதுணையாக நிற்போம்“ என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.