மஸ்கெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு அபராதம்!
In இலங்கை September 24, 2018 2:57 pm GMT 0 Comments 1357 by : Ravivarman

மஸ்கெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு ஹற்றன் நீதவான் 3000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் கிங்கோரா பிரிவில் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கஞ்சா செடிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஹற்றன் நீதிமன்றில் ஆஜர்செய்தபோதே நீதவான் 3000 ரூபாவினைத் தண்டப் பணமாக அறிவித்து சந்தேக நபரை விடுதலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.