மஹர சிறைக் கலவரம் தொடர்பான நீதி அமைச்சின் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்
In இலங்கை December 1, 2020 9:12 am GMT 0 Comments 1643 by : Jeyachandran Vithushan

மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விலகியுள்ளார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவில் அஜித் ரோஹணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நீதி அமைச்சருக்கு கடிதம் மூலம் இதனை தெரிவித்துள்ள அஜித் ரோஹண, ஊடக பேச்சாளராக செயற்படும் தான் சிறைச்சாலை பிரச்சினை உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்து வழக்கமான ஊடக விளக்கங்களை நடத்துவதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் நீதி அமைச்சின் குழுவின் உறுப்பினராக செயல்பட்டால், அது மோதலாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அஜித் ரோஹண, ஊடக சந்திப்புக்களை நடத்த முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உண்மைகளை கருத்தில் கொண்டு அவருக்கு பதிலாக மற்றொரு அதிகாரியை நியமிப்பதே பொருத்தமானது என்றும் நீதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.