மஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து!
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கையில் நெல்சன் மண்டேலா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை அமைதியின்மை குறித்த கரிசனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பதிவொன்றை செய்துள்ளார்.
அதில், சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் அதனால் கைதிகள் சிலர் மரணமடைந்துள்ளமை தொடர்பாக் வெளியான செய்திகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உரிய விசாரணைகளின் ஊடாக இச்சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Concerning news reports of prison unrest & death of inmates. Investigations should clarify the exact nature of events. Vital to address the situation of detained persons during #COVID19, to protect detainees & staff. UN stands ready to support Govt implement #NelsonMandelaRules.
— Hanaa Singer (@SingerHanaa) November 30, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.