UPDATE – மஹர சிறைச்சாலை அமைதியின்மை: கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய நீதிமன்றம் மறுப்பு
In இலங்கை December 16, 2020 7:15 am GMT 0 Comments 1703 by : Jeyachandran Vithushan

UPDATE – 2 மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட 04 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சடலங்களை இன்று புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
UPDATE – மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மையில் கொல்லப்பட்ட நான்கு கைதிகளை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதற்கான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கொல்லப்பட்ட நான்கு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மொத்தம் 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பேரின் உடல்களின் பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன, குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.