மஹர சிறையில் உயிரிழந்த கைதிகள் – பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவு
In இலங்கை December 9, 2020 9:15 am GMT 0 Comments 1494 by : Dhackshala

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே 5 பேர் கொண்ட விசேட நிபுணர் குழுவிற்கு வத்தளை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் விசேட நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்படவேண்டும் என நேற்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 165 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.