மஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் காயமடைந்த 104 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறைச்சாலையின் தாதி ஒருவரும் மருத்துவ ஆலோசகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மஹர சிறைச்சாலையின் கைதிகளில் 38 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, ராகம போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹர சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகத்தை உடைத்து, உள ரீதியாக குழப்பநிலையை தோற்றுவிக்கக்கூடிய மருந்தினை உட்கொண்டமையே வன்முறைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.