மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருந்தன.
மரக்கன்றுகள் வழங்கும் ஏற்பாட்டார்களின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.