மஹிந்த பிரதமரானாலும் பொறுப்பு கூறலில் இருந்து விடுபட முடியாது – அமெரிக்கா!
In இலங்கை October 26, 2018 9:06 pm GMT 0 Comments 3006 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், பொறுப்பு கூறலையும் நல்லிணக்கத்தையும் உரிய வகையில் நிலைநாட்டுவதுடன் வன்முறைகளை தவிர்த்து அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து செயற்படுமாறும் அமெரிக்கா இலங்கையை கேட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் சகல கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.