மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது!
In இப்படியும் நடக்கிறது April 19, 2019 11:47 am GMT 0 Comments 7603 by : Benitlas

சுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பாடசாலை மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும் ஷவரில் குளிக்கும்போதும் ரகசியமாக காணொளி எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
80 மாணவிகளை அவர் காணொளியாக பதிவும் செய்துள்ளார். 21 வயதான குறித்த கால்பந்து பயிற்சியாளர், குறைந்தது ஐந்து பாடசாலைகளின் மாணவிகளை Lucerne நீச்சல் குளம் ஒன்றில் காணொளி எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக மாணவிகள் உடைமாற்றும் அறையிலும், நீந்துவதற்கு முன்னும் பின்னும் ஷவரில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீந்தும்போதும், கெமராக்களை மறைத்து வைத்து காணொளியாக பதிவு செய்துள்ளார்.
குறித்த காணொளிகளிலுள்ள ஐந்து மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தான் ஒளிப்படங்கள் எடுத்ததையும் அவற்றை காணொளியாக பதிவு செய்துள்ளமையினையும் அந்த பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.