மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர்தின நிகழ்வுகள்!
In இலங்கை October 14, 2018 9:25 am GMT 0 Comments 1297 by : Ravivarman
சிறுவர் தினத்தையொட்டி மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலேயே நேற்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
அதேநேரம், மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.