மாமியார் வேடத்தில் களமிறங்குகிறார் தேவையானி

பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, திருமணத்தின் பின்னர் அம்மா வேடங்களில் நடித்து வந்தார். தற்போது அதையும் கடந்து மாமியாராக மாறி இருக்கிறார்.
மூத்த இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. இதில் நாயகனாக நடிக்கும் தினேஷிற்கு மாமியாராக நடித்துள்ளார்.
இதில் கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முக்கிய பாத்திரத்தை பொறுப்பேற்கும் தேவையானி மாமியார் வேடத்தில் வருகிறமை ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாக அமையும் என எதர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.