மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த நாடு கடந்த தமிழ் உறவுகள்
In உலகம் December 1, 2020 4:55 am GMT 0 Comments 1587 by : Jeyachandran Vithushan

நாடு கடந்த தமிழ் உறவுகளினால் கடந்த வாரம் பல நாடுகளில் மாவீரர் தினம் நினைவு கூரப்பட்டது.
இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாடுகளில் பொது நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்தமையினால் பெரும்பாலான நிகழ்வுகள் ஒன்லைனில் நடைபெற்றன.
இருப்பினும், இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் சிறிய ஒன்று கூடல்கள் இடமபெற்றன.
அங்கு போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ் பொதுமக்கள் நினைவாக விளக்குகள் ஏற்றப்பட்டன.
அத்தோடு இங்கிலாந்தில் இடமபெற்ற நிகழ்வுகளில் சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடாவில் பெரிய அளவிலான நாடு கடந்த தமிழ் உறவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.