மாவீரர் நாள்: பருத்தித்துறை நீதிமன்ற வழக்கு நாளைவரை ஒத்திவைப்பு!
In ஆசிரியர் தெரிவு November 25, 2020 2:04 pm GMT 0 Comments 1365 by : Litharsan

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்த மூன்று பொலிஸாரினாலும் மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், வழக்குத் தொடர்பிலான தீர்ப்பினை நாளை வழங்குவதாக அறிவித்து நீதவான் வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.
பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் எதிராளிகள் தரப்பில் சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.