மாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
In இங்கிலாந்து November 27, 2020 4:21 pm GMT 0 Comments 2381 by : Litharsan

தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர்.
மேலும், ‘சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற இல்லக் கட்டடத்தில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.