மாவெல்ல நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
In இலங்கை December 7, 2020 2:43 am GMT 0 Comments 1352 by : Yuganthini

மாவெல்ல நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டன.
உத்தேச நங்கூரமிடும் தளத்தில் 260 மீட்டர் நீளமான பிரதான ‘தியகடன’ இரு கரையோர ‘தியகடன’ மற்றும் கப்பல் போக்குவரத்தை இலகுவாக்கும் நோக்கில் உள்நுழையும் கால்வாயொன்றும் அமைக்கப்படவுள்ளன.
வெளிப்புற எஞ்சின்களை கொண்ட 350 ஃபைபர் படகு வசதிகளையும், கப்பல்களுக்கு பாதுகாப்பான கப்பல் அணுகலையும் வழங்குவதன் மூலம் மீனவர் மற்றும் மீனவ குடும்பங்களுக்கு பாதுகாப்பான தொழில்முறை மட்டத்தை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச மாவெல்ல மீன்பிடி நங்கூரத்தை நிர்மாணிப்பதன் மூலம் 1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தப்படுவதுடன், அதன் மூலம் மீனவ சமுதாயத்தினரின் மீன்பிடி நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் அமையும்.
15 மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இதன் கட்டுமான பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 380.07 மில்லியன் ரூபாயாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.