மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்!
In கனடா November 8, 2018 8:40 am GMT 0 Comments 1338 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 44 வயதுடையவர் என்றும் அவர் வில் மற்றும் அம்பினாலேயே தாக்கப்பட்டுள்ளார் என்றும் பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.