மிதுன் சக்கரவர்த்தியின் மகனது திருமணம் இரத்து!
In சினிமா July 7, 2018 9:40 am GMT 0 Comments 2070 by : Yuganthini

பொலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகனான அக்க்ஷயின் திருமணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஊட்டியில் இன்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
மிதுன் சக்கரவர்த்தியின் மகனான அக்க்ஷயன் மும்பைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஆகையால் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். மேலும் மிதுன் சக்கரவர்த்தியின் குடும்பமும் அப்பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அப்பெண் டெல்லி பொலிஸில் அக்க்ஷயன் மீது முறைப்பாடொன்றை செய்துள்ளார். இதனடிப்படையில் பொலிஸார் அவரை தேட ஆரம்பித்துள்ளனர்.
இவ்விடயம் அறிந்த அக்க்ஷயன், முன் ஜாமின் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுடன் முன் ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வேறொரு பெண்ணை இரகசியமான முறையில் திருமணம் செய்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அக்க்ஷயனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை நீதிபதி, டெல்லி நீதிமன்றத்தை நாடுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
இதனால் அக்க்ஷயன், பொலிஸார் எந்நேரத்திலும் தன்னை கைது செய்வார்களென எண்ணி தலைமறைவாகி விட்டார். ஆகையால் இன்று நடைபெறவிருந்த திருமணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.