மினுவங்கொட கொரோனா கொத்தணிக்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் : சுதர்ஷனி
In ஆசிரியர் தெரிவு December 7, 2020 8:40 am GMT 0 Comments 1639 by : Jeyachandran Vithushan
மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிட்ட அவர், இது தொடரர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , “மினுவங்கொட கொத்தணி உருவான பிரன்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு இந்தநோய் பரவிய விதம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றது.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர்களிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் போது சீதுவ ரமாதா ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரேன் நாட்டு விமான பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த ஹோட்டலின் பணியாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அங்குள்ள பலருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்களுக்கும் மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விதத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மினுவங்கொட பிரின்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மேற்குறிப்பி;ட்ட விதத்தின் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
பேராசிரியர் நீலிக்க பலவெக்கே வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் போது இப்போது நாட்டில் பரவி வரும் வைரஸானது இதற்கு முன்னர் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தவையல்லவென தெரிவித்தார்.
இப்போது பரவும் வைரஸானது ஐரோப்பிய நாடுகளில் பரவும் வைரஸூக்கு இணையானது என அவர் தெரிவித்தத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட விடயத்துக்கு இது சாட்சியாக அமைகின்றது” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.